இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமாகி புதுப்புது அர்த்தங்களில் அண்ணன் சொல்லு அண்ணன் சொல்லு வசனம் மூலம் மிகப்பிரபலமாகி பின்னாட்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி காமெடி நடிகராகி பின்பு கலாம் அறக்கட்டளை மூலம் பலவித சமூக சேவை முக்கியமாக மரம் நடும் பணிகள் உள்ளிட்டவற்றை செய்து வருபவர் நடிகர் விவேக்.
இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதை ஒட்டி ஊட்டியில் உள்ள கோத்தகிரியில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுடன் கொண்டாடினார். குழந்தைகள் கூட்டத்தில் அவர் சிக்கி கொண்டு பிறந்த நாள் கொண்டாடியதை மகிழ்ச்சியுடன் அவர் டுவிட் இட்டுள்ளார்.
அந்த பள்ளியில் மரம் நடும் பணிகளில் கலந்து கொண்டார் விவேக்.