ஒரு நடிகர் அதிக தோற்றங்களில் ஒரே படத்தில் தோன்றுவதை சாதனையாக கருதப்படுகிறது. சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில் ஒன்பது கேரக்டர்களிலும் கமல்ஹாசன், ‘தசாவதாரம்’ படத்தில் 10 கேரக்டர்களிலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் 20 விதமான தோற்றங்களில் நடிகர் விக்ரம் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். டிமாண்டி காலனி ‘ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தில் தான் இந்த 20 கேரக்டர்கள் என்பதும் இது ஒரு உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும் முடிவடைந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
விக்ரம் ஜோடியாக ‘கேஜிஎஃப்’ படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தின் வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.