நடிகர் சதீஷ் இவர் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்திலிருந்து அனைவருக்கும் பரிட்சயமான காமெடி நடிகர். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்.
விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி செய்துள்ளார் இவர். நீண்ட நாட்களாக டுவிட்டரில் ஜாலி ஸ்டேட்டஸ் இடும் இவர் திருமணம் எப்போ என்ற கேள்விக்கு மட்டும் நழுவி வந்தார்.
சிக்ஸர் படத்தில் நடித்தபோது இவருக்கும் இப்பட இயக்குனர் சாச்சியின் தங்கைக்கும் காதல் ஏற்பட்டதால் அவரையே மணக்கிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 6ல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் துணை முதல்வரை விழாவில் கலந்து கொள்ள நேரில் அழைத்துள்ளார் நடிகர் சதீஷ்.