நயன்தாரா குறித்த வதந்தி ஒன்றை அவருடன் நடிக்கும் நடிகர் ஒருவரே பரப்பி விட்டது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டு தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பு வரும் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அவர் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மன் கேரக்டரில் நடிக்க உள்ளார்
இந்த நிலையில் இந்த படத்தில் அம்மன் கேரக்டரில் நடிக்க இருப்பதால் படப்பிடிப்பு தொடங்கும் நாளில் இருந்து படப்பிடிப்பு முடியும் நாள் வரை நயன்தாரா விரதம் இருக்கப் போவதாக ஒரு செய்தி வெளியானது
நயன்தாரா தரப்பினர் இந்த செய்தியை மறுத்து உள்ளனர். இந்த செய்தி ஒரு வதந்தி என்றும் நயன்தாரா விரதம் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த வதந்தியை பரப்பியது யார் என்று ஆய்வு செய்தபோது இந்த வதந்தியை மூக்குத்தி அம்மன் படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பரப்பியது தெரியவந்துள்ளது
இந்த படத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக தனக்கு தெரிந்த ஊடகவியலாளர்களிடம் ஆர்ஜே பாலாஜி இந்த செய்தியை பரப்பி உள்ளார் என்றும் அந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக தீயாக பற்றிக் கொண்டு வதந்தியாக வலம் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆர்ஜே பாலாஜியின் இந்த விளம்பர யுக்தி புத்திசாலித்தனமாக இருந்தாலும் விரதம் போன்ற ஒரு புனிதமான காரியத்தை தங்களுடைய விளம்பரத்திற்காக பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது