கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர் உள்பட பலர் நடித்து வருவது…

be46dde1ed76df7eb038669faae3fde8-1

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர் உள்பட பலர் நடித்து வருவது தெரிந்ததே

இதனை அடுத்து கமல்ஹாசனின் மனைவியாக ’இந்தியன்’ படத்தில் நடித்த சுகன்யா நடித்திருந்த நிலையில் தற்போது இந்தியன் 2’ சுகன்யா கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாக கூறப்படுகிறது

2a0e2f36c7d8748ae253a1e990d91c8d

இந்தியன் படத்தில் சுகன்யாவின் கேரக்டரே வயதான கேரக்டராக இருக்கும். சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த கேரக்டர் தற்போதைய காலத்தில் 90 வயது அளவு இருக்கும் என்பதால் ப்ரியா பவானிசங்கருக்கு 90 வயது கிழவி மேக்கப் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தின் பெரும்பாலும் பிளாஷ்பேக் காட்சிகளாக இருக்கும் என்பதால் அவர் இளமை தோற்றத்துடன் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடிக்க வந்த மிகக் குறுகிய காலத்திலேயே ப்ரியா பவானி சங்கருக்கு கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன