‘நோ மீன்ஸ் நோ’: அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

அஜித் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் உடனடியாக ஒப்புக் கொள்ளும் மனநிலையில் தான் கோலிவுட் திரையுலகில் உள்ள அனைவரும் இருக்கின்றனர். ஆனால் அஜித் நடிக்க உள்ள ’வலிமை’ படத்தில் அவருடன்…

அஜித் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் உடனடியாக ஒப்புக் கொள்ளும் மனநிலையில் தான் கோலிவுட் திரையுலகில் உள்ள அனைவரும் இருக்கின்றனர். ஆனால் அஜித் நடிக்க உள்ள ’வலிமை’ படத்தில் அவருடன் படம் முழுக்க டிராவல் செய்யும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வந்த வாய்ப்பை ஒரு பிரபல நடிகர் மறுத்துள்ளார்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அரவிந்தசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

ஆனால் அவர் தற்போது ’தலைவி’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்து வருவதால் அந்தப் படத்தின் கெட்டப்பில் இருந்து இப்போதைக்கு வெளியே வர முடியாது என்று அரவிந்த்சாமி கூறி வலிமை படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது

இதனையடுத்து வலிமை படத்தில் இந்த கேரக்டரில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜீத், அர்ஜூன் இணைந்து நடித்த மங்காத்தா என்ற படம் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன