நடிகர் துருவ் விக்ரம் பாலாவின் இயக்கத்தில் வர்மாவில் நடித்து பின்பு அந்த படம் எடுத்த விதம் சரியில்லை என தயாரிப்பு நிறுவனத்தால் கைவிடப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டு தெலுங்கு இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் உருவாகி வந்திருக்கும் தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கே ஆதித்ய வர்மா.
அதோ வருகிறது இதோ வருகிறது என ஒரு வழியாக வந்து விட்டது ஆதித்ய வர்மா. இன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது அறிமுக நடிகர்தான் இவர் இருந்தாலும் பெரிய நடிகரான விக்ரமின் மகன் என்பதால் இவரது படத்தையும் ஸ்பெஷல் ஷோ, முதல் காட்சி கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் என கலக்க இருக்கின்றனராம் ரசிகர்கள். இவர்களில் பாதி பேர் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.