அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன
முதலில் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், சர்வதேச தீவிரவாத கும்பலை பிடிக்கும் ஒரு போலீஸ் உயரதிகாரி கேரக்டருக்காக அவர் தன்னை தயார் படுத்தியுள்ள்டஹாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென அஜித் வித்தியாசமான கெட்டப்பில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்த ஒரு தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலானது. இந்த தோற்றத்தை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்றும் இந்த இரண்டாவது கெட்டப் வில்லன் போன்று இருப்பதால் இந்த படத்தில் அஜித் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
நயன்தாரா இந்த படத்தில் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திதில் மேலும் சில பிரபலங்கள் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது