20 வருடத்தை கடந்த முதல்வன்

கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல்வன். அர்ஜூன், மனிஷா கொய்ராலா,ரகுவரன், மணிவண்ணன், லைலா, வடிவேலு, ஹனிபா போன்றோர் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் மணிமகுடங்களில் ஒன்று இப்படம். ஆட்சியாளர்களையும் அவலங்களையும் கண்டு கொதிக்கும் ஒரு…

கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல்வன். அர்ஜூன், மனிஷா கொய்ராலா,ரகுவரன், மணிவண்ணன், லைலா, வடிவேலு, ஹனிபா போன்றோர் நடித்திருந்தனர்.

9a9955f682d19326cd0b72197f081743-1

இயக்குனர் ஷங்கரின் மணிமகுடங்களில் ஒன்று இப்படம். ஆட்சியாளர்களையும் அவலங்களையும் கண்டு கொதிக்கும் ஒரு இளைஞனிடம் ஒரு முதலமைச்சர் ஒரு நாள் முதல்வராக இருந்து பார்க்க சொல்லி சவால் விட அதன்படி ஒரு நாள் மட்டும் முதல்வராக பொறுப்பேற்க்கும் முதல்வர் அர்ஜூன் ஒரு நாளில் பல சமுதாய பிரச்சினைகளை கழுவி களைவதுதான் கதை.

இதில் சிறப்பான காட்சி ஒன்று ரகுவரனுக்கும் அர்ஜூனுக்கும் படத்தில் வந்தது. நிருபரான அர்ஜூன் நேரலையில் முதல்வர் ரகுவரனை வறுத்தெடுக்கும் அந்த காட்சி இப்படத்தில் புகழ்பெற்று விளங்கியது.

கடந்த 7ம் தேதியுடன் 20 வருடங்களை நிறைவு செய்த முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாமா என சமூக வலைதள நண்பர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன