வாஹினி புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் சங்கத்தமிழன். இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே படத்தயாரிப்பாளர் மறைந்து விட்டார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என நினைத்த நேரத்தில் சில தவிர்க்க முடியாத பிரச்சினைகளால் இப்படம் வெளிவரவில்லை.
இந்நிலையில் இப்படம் வரும் 15ம் தேதி இப்படம் வெளியாவதாக கூறப்பட்டுள்ளது.
இப்படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி ஜனரஞ்சகமாக கமர்சியல் படங்களில் இதுவரை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நடித்துள்ளார், கருப்பன், றெக்க, வரிசையில் இந்த படமும் விஜய் சேதுபதி நடிப்பில் கமர்ஷியல் படமாக வர இருக்கிறது.