சிறு இடைவேளைக்கு பின் பரத் படம்- இன்று டிரெய்லர் வெளியீடு

பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத் 5கதாநாயகர்களில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த கதாநாயகர்களில் முன்னணி கதாநாயக நடிகராக உயர்ந்தவர் இவரும் நகுலும் மட்டுமே. காதல், வெயில் என பல…

பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத் 5கதாநாயகர்களில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த கதாநாயகர்களில் முன்னணி கதாநாயக நடிகராக உயர்ந்தவர் இவரும் நகுலும் மட்டுமே.

290265687cf2c33c82b96e70c4a60c48

காதல், வெயில் என பல படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகரான பரத் சில வருடங்களாக அதிக படமில்லாமல் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

கடைசியாக கடந்த ஏப்ரலில் பொட்டு படம் ரிலீஸ் ஆனது. அது போதிய வெற்றியை பெறாத நிலையில் பரத் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் காளிதாஸ் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இவருடன் முக்கிய வேடத்தில் சுரேஷ் மேனன் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் அடிப்படையில் இப்படம் உருவாகி உள்ளது. இயக்கி இருப்பவர் ஸ்ரீ செந்தில்.

இப்படத்தின் டிரெய்லரை ஜெயம் ரவி மற்றும் அருண் விஜய் இன்று வெளியிடுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன