மொக்க படத்தை எடுத்த அட்லிக்கு ரூ.25 கோடி, சூப்பர்ஹிட் படத்தை எடுத்த லோகேஷுக்கு ரூ.50 லட்சம்

கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களில் விஜய், கார்த்தி என்ற இந்த இரண்டு நடிகர்களின் போட்டி படங்களாக…


ff7b2e0486e739bdaddd0195a28fc353

கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களில் விஜய், கார்த்தி என்ற இந்த இரண்டு நடிகர்களின் போட்டி படங்களாக மட்டுமின்றி இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் என்ற போட்டியும் ஒரு பக்கம் நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த ஒப்பீட்டு போட்டியில் கிட்டத்தட்ட லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் பிகில் படத்தை விட கைதி திரைப்படம் தான் நல்ல படம் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிகில் படத்திற்காக அட்லீக்கு ரூபாய் 25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் கைதி படத்திற்காக லோகேஷ் கனகராஜூக்கு ரூபாய் 50 லட்சம் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து நெட்டிசன்கள் இந்த ஒப்பீட்டை வெளுத்து வாங்கி வருகின்றனர். மொக்கை படத்தை எடுத்த அட்லீக்கு ரூபாய் 25 கோடியா? என்றும், நல்ல படத்தை எடுத்த லோகேஷுக்கு வெறும் 50 லட்சம் தானா? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஒப்பீடு கருத்துக்கள் உண்மையில் சரிதானா? என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன