பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தாய்லாந்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது
‘பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் பார்த்திபன், ஜெயராம், த்ரிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கவுள்ளார். ஏற்கனவே அப்பா ஜெயம் ரவி மற்றும் மகன் ஆரவ் ஆகிய இருவரும் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆரவ் எந்த கேரடக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை