சூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை வென்ற மூக்குத்தி முருகன்!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றார். பல்வேறு கட்டங்களைத்…

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றார்.

03b35b6a49a62470d9158280678c9444

பல்வேறு கட்டங்களைத் தாண்டி நடைப்பெற்ற இறுதிப் போட்டிக்கு சாம் விஷால், புன்யா, மூக்குத்தி முருகன், விக்ரம் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேர் தகுதிப் பெற்றனர்.

இன்று நடந்த இப்போட்டியில் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புன்யா இருவரும் பெற்றனர். இவர்கள் இருவருக்கும் பாட வாய்ப்பு தருவதாக அனிருத் மேடையில் அறிவித்தார்.

இரண்டாமிடத்தை விக்ரம் பெற்றார். இரண்டாமிடத்தைப் பெற்றதால் இவருக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கிடைத்துள்ளது.

மூக்குத்தி முருகன் முதலிடத்தைப் பெற்று சூப்பர் சிங்கர் சீசன் 7 வின்னர் பட்டத்தை வென்றார். முதலிடம் பெற்றதால் மூக்குத்தி முருகனுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடும், அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன