விவேக்கும் கமல்ஹாசனும் இணைவது மிகப்பெரிய அதிசய நிகழ்வுதான் இதை பலமுறை பல கட்டுரைகளில் சொல்லியாயிற்று. கமலும், விவேக்கும் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களாவர்.
ஆனால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. தெனாலி படத்தில் விவேக் நடிக்க வேண்டிய பாத்திரம் கூட தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மதன்பாப் நடிக்க வேண்டியதாயிற்று.
இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை கமலுக்கு கொடுத்து நேரில் சந்தித்துள்ளார் விவேக்.