பிரபல முன்னணி தொலைக்காட்சியில் முக்கியமான பாடல் போட்டி நடந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். இந்த போட்டியின் பைனல் கடந்த ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் மூக்குத்தி முருகன்.
இவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். மேடையில் எல்லோருக்கும் இரண்டு பாடல் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது அப்போது முருகன் பாடிய பாடல் ஸ்ரீ பிரியா, ரஜினி நடித்த பில்லா பட பாடலான வெத்தலைய போட்டேண்டி பாடல்தான்.
இந்நிலையில்
இதுகுறித்து நடிகை ஸ்ரீபிரியா அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.
அதில்,
“விஜய் டிவி – சூப்பர் சிங்கர் பட்டம் எப்போதுமே பாடுவதில் திறமையானவருக்கு வழங்கப்படுவதில்லை என நம்புகிறேன். அந்த 5 போட்டியாளர்களில் புண்யாவும் விக்ரமும்தான் இசை ரீதியாக அற்புதத் திறமைகள் கொண்டவர்கள் போங்காட்டம் ஆரம்பமாகிவிட்டது.
எப்போதாவது நியாயமா, சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.