இயக்குனர் ரஞ்சித் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் பல சமூக விசயங்களையும் கையில் எடுத்து போராடி வருகிறார். அவ்வப்போது கடும் எதிர்ப்பையும் அறிக்கைகள் மூலமாகவும் மேடைப்பேச்சின் மூலமாகவும் ஜாதி, தீண்டாமை இது போல தவறான விசயங்களை எடுத்துரைத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையின் முக்கியமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் கழிவு நீர் சாக்கடையை சுத்தம் செய்தபோது அருண்குமார் என்ற இளைஞர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஞ்சித், # மக்கள் அதிக அளவில் கூடும் சென்னையின் அதி நவீன Express Avenue Mall-ல் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்தஅருண்குமார் என்ற இளைஞர் விஷவாயுதாக்கி உயிரிழப்பு! பேர் அவலம்!! தமிழக அரசே இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளை தடுத்து நிறுத்த??????? என்று வினவியுள்ளார் ரஞ்சித்.