அரசியல் வெற்றிடம்: ரஜினியின் கருத்துக்கு கமல் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கூறிய கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக பிரமுகர்களும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்களும், மற்ற அரசியல்…

aafa3170564c04625e8c9a3249a2d957

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கூறிய கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக பிரமுகர்களும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்களும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முக அழகிரி, ரஜினி கூறியபடி தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான்’ என்று கூறினார். இதனை அடுத்து சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அவரும் ஆமோதித்துள்ளார். ரஜினியின் கருத்துக்கு முதல் முறையாக கமலஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் வேலூர் மற்றும் விக்கிரவாண்டி-நாங்குனேரி ஆகிய இடைத்தேர்தல்களில் போட்டியிடாத கமல்ஹாசன் கட்சி, வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன