கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தயாரித்து இயக்கிய புன்னகை மன்னன் திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் சாதனையை செய்துள்ளது
2000ங்களுக்கு பிறகு சிடி வந்து விட்டது அதற்கு பிறகு டிவிடி, பென் டிரைவ், மெமரி கார்டு என டிஜிட்டல் யுகமாக வளர்ந்து விட்டது.
ஆனால் அப்போதெல்லாம் கேசட் மட்டும்தான் அதுவும் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தின் ஆடியோ கேசட்டே விற்பனையில் சாதனை படைத்துள்ளது. ஆடியோ வெளியிட்ட உடனே 1லட்சம் காசெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.
இது அந்த நேரத்தில் கமல்ஹாசன், இளையராஜா, பாலச்சந்தர் காம்போ மீது ஏற்பட்ட அதீத எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இப்படத்தின் காசெட்டை வாங்கி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.