அந்த கால சிவாஜி படங்களில் ஆரம்பித்து, ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்தவர் ஒய்.ஜி மகேந்திரன். தற்போது அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் பெரும்பான்மையாக படங்களில் இவர் நடிப்பதில்லை.
கன்னியாகுமரி வந்த இவர் தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவினரின் ஆதரவு சில திராவிட கட்சிகளுக்கு இருந்தது போல் விரைவில் பாஜகவினருக்கும் அத்தகைய ஆதரவு கிடைக்கும் என் தெரிவித்துள்ளார்.
நாடு முன்னேற வேண்டுமென்றால் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு பின்னால் மக்கள் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.