ரஜினிகாந்த் தமிழக சினிமா சூப்பர் ஸ்டார் என்ற நிலையை எல்லாம் தாண்டி இந்தியா தெரிந்த பிரபலமான ஆன்மிகவாதி, நடிகர், அரசியல் ரீதியான நபர் என்ற பிம்பம் கொண்ட நபராகி நீண்ட வருடங்கள் ஆகிறது.

ரஜினிகாந்த் பல்வேறு விருதினை மாநில, மத்திய அரசுகளிடம் இதுவரை சினிமாத்துறை ரீதியாக வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு சிறப்பு விருதினை மத்திய அரசு வழங்கி கெளரவிக்க இருக்கிறதாம்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் பல்வேறு வருடங்களாக சினிமாத்துறையில் பங்கேற்று அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமாக இருப்பதன் அடிப்படையில் இந்த சிறப்பு விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறதாம்.
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா வரும் 20ம் தேதி தொடங்குகிறது அந்த விழாவில் இந்த சிறப்பு விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.
