இயக்குனர் மிஷ்கினின் படங்கள் அனைத்தும் வித்தியாசமான முறையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களாக இருக்கும். சமீபத்தில் சைக்கோ படத்தை முடித்துள்ள மிஷ்கின் அதை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் உள்ளார். சமீபத்தில்தான் அதன் டீசர் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே இயக்குனர் மிஷ்கின் புதிதாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்குகிறார். விஷால் நடித்து இரண்டு வருடம் முன்பு வந்த துப்பறிவாளன் 2 படத்தின் தொடர்ச்சியே இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் இன்று தொடங்குகிறது. இப்படத்தில் விஷால் நடிக்க, மிஷ்கின் இயக்க இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.