நடிகை இஷா கோபிகர் தமிழில் என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வேறு மொழிப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் இவர். இவர் ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டிலாகி விட்டார்.
இப்போது பழைய விசயங்களை மனம் திறந்துள்ள அவர் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த போது ஒரு படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் கூறியதன் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் ஒருவரை பார்க்க நேர்ந்ததாகவும் அவர் தன்னை பாலியல் ரீதியாக தவறாக அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பேச்சு பரபரப்பை அளித்துள்ளது என்றாலும், அவர் எந்த மொழி நடிகர் என கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமான விசயமே .