துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ஆதித்யவர்மா’ என்ற திரைப்படம் நவம்பர் 8ம் தேதி வெளியாக உள்ளதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின
இந்த நிலையில் திடீரென இன்று இந்த படம் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்த பிகில் திரைப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகி பெரும்பாலான திரையரங்குகளில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆதித்ய வர்மா திரைப்படம் நாளை மறுநாள் வெளியானால் ஒரு சில திரையரங்குகளில் இருந்து பிகில் திரைப்படம் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆதித்ய வர்மா படத்தின் ரிலீசை தள்ளி வைக்குமாறு நிர்ப்பந்தம் செய்ததாகவும், இதன் காரணமாகவே வரும் நவம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு வதந்தி கூறப்பட்டு வருகிறது
பிகில் திரைப்படம் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த போதிலும் தற்போது அந்த படம் தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் காற்றாடி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் இன்று ‘யூ’ சான்றிதழை கொடுத்துள்ளனர்,.