சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வரும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் மிகவும் வசதியுடன் பயணம் செய்து வருகின்றனர். டிராபிக் பிரச்சனையின்றி குறைந்த கட்டணத்தில் சொகுசான பயணம் செய்யப்படுவதால் மெட்ரோ ரயிலை தற்போது அதிக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தங்களது இருப்பிடம் மற்றும் அலுவலகம் செல்ல வசதியாக இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டது
முதல் கட்டமாக சென்னை கிண்டி மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது
வோகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதியில் ஓட்டுநர் உரிமம் மற்றும் செல்பி புகைப்படத்தை ஆன்லைனில் பதிவு செய்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் நான்கு மட்டுமே கட்டணம் என்பதும் ஆன்லைனிலேயே இந்த கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது