ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி எந்த அளவுக்கு சீக்கிரமாக படப்பிடிப்பு முடிந்துவிடுமோ, அந்த அளவுக்கு படத் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். தயாரிப்பு செலவுகளுக்கான வட்டி உள்பட பல செலவுகள் விரைவாக படப்பிடிப்பு முடிந்ததால் குறையும் என்பது சினிமா வட்டாரங்களுக்கு தெரிந்த ஒரு விஷயம் ஆகும்
இந்த நிலையில் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படத்தை கடந்த இரண்டு வருடங்களாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வந்த நிலையில் தற்போது தனுஷின் 40வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெறும் 64 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்
இடைவேளை இன்றி தொடர்ச்சியாக லண்டனில் 64 நாட்கள் படப்பிடிப்பை நடத்திய கார்த்தி சுப்புராஜ் இன்றுடன் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நாளை அல்லது நாளை மறுநாள் தனது படக்குழுவினருடன் சென்னை திரும்பு உள்ளாராம்
சென்னை திரும்பியவுடன் குறைந்தபட்சம் 20 முதல் 30 நாட்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து விட்டு டிசம்பரில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அவர் தயார் செய்துவிடுவார் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது
இதுபோன்ற இயக்குநர்கள்தான் தயாரிப்பாளருக்கு தேவை என்றும் நேரத்தை வீணாக்காமல் எவ்வளவு விரைவாக படத்தை தயாரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து கொடுக்க வேண்டியது ஒரு இயக்குனரின் கடமை என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது