இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க உள்ளார். இதுவரை திரைத்துறையினர் பலரு முயன்று இந்த நாவலை படமாக்க முயன்றும் தோல்வியைத்தான் தழுவியுள்ளனர்.
கதையின் கதாபாத்திரங்களும் கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவு பிரமாண்ட கற்பனை காட்சிகளும் இந்த நாவலில் அதிகம்.
இந்நிலையில் இக்கதையை முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் படமாக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறுகிறது. டிசம்பர் மாதத்தில் தாய்லாந்தில் உள்ள காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறதாம்