ரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டங்களில் நடித்த பல படங்களுக்கு இளையராஜாதான் இசை. முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில்தான் ஸ்டீரியோ ஃபோனிக் கலக்கல் இசையை இளையராஜா கொடுத்தார்.
ரஜினியின் அதிரடி படங்கள் பலவற்றில் இளையராஜாதான் ஆரம்ப காலத்தில் கலக்கல் இசையை வெளிப்படுத்தி இருந்தார். ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினிஇரவு வேட்டைக்கு செல்லும் நேரத்தில் எல்லாம் கலக்கலான பிஜிஎம்மை இளையராஜா இசைத்திருப்பார்.
அவரின் மாப்பிள்ளை , ராஜாதி ராஜா உள்ளிட்ட மாஸ் படங்களின் வெற்றிக்கும் ஸ்டைலுக்கும் இளையராஜா இசையும் ஒரு காரணம்.
அது போல பின்பு வந்த தேவா ரஜினிக்கு பெயர் போடுவதற்கென்றே ஜேம்ஸ்பாண்ட் மியூசிக்கை கொஞ்சம் உருவி அதிரடியாக ஒரு பிஜிஎம்மை உருவாக்கினார்.
ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களின் மாஸ் இசைக்கு தேவா ஒரு காரணமாக இருந்தார்.
அதன் பிறகு ரஜினி பல படங்களில் நடித்தாலும் மிக வலிமையான மாஸ் இசையை அனைவரும் எழுந்து நின்று ஆடும் இசையை சில வருட இடைவேளைக்கு பிறகு அனிருத் தான் கொடுத்திருந்தார். உதாரணமாக தேவா பட்டி டிங்கரிங் பார்த்து மெருகேற்றி வைத்திருந்த ரஜினியின் டைட்டில் ஓப்பனிங் பிஜிஎம்மை பேட்ட படத்தில் மிக அதிரடியாக மெருகேற்றி இருந்தார். மேலும் மகேந்திரன் இறந்து போன வீட்டில் ரஜினி டான்ஸ் ஆடிக்கொண்டே ஒரு வில்லனை துப்பாக்கியால் போட்டுத்தள்ளும் காட்சியில் மிக அழகான அதிரடி இசையை இவர் வெளிப்படுத்தி இருந்தார்.
இப்போது தர்பார் படத்திற்கும் அனிருத் தான் இசை. இப்படத்திலும் ஜனரஞ்சகமான இசையை அவர் இசைத்திருக்கிறார் என்பதை மோஷன் போஸ்டரில் வரும் அதிரடி இசையிலேயே உணர முடிகிறது.