தீபாவளி வெற்றிப்படங்கள் வரிசை- வெற்றி விழா

படம் வந்து வெற்றி பெறுவது அப்புறம் இருக்கட்டும். முதலிலேயே படத்தின் தலைப்பையே வெற்றி விழா என வைத்தால் அது வெற்றியடையாமல் இருக்குமா. கடந்த 1989ம் ஆண்டு அக்டோபர் மாத தீபாவளி திருநாளில் வெளியான படம்தான்…

படம் வந்து வெற்றி பெறுவது அப்புறம் இருக்கட்டும். முதலிலேயே படத்தின் தலைப்பையே வெற்றி விழா என வைத்தால் அது வெற்றியடையாமல் இருக்குமா.

dc9efba1d77d574646adf69bd8915d27-1

கடந்த 1989ம் ஆண்டு அக்டோபர் மாத தீபாவளி திருநாளில் வெளியான படம்தான் வெற்றி விழா. இப்போதைய அஜீத் விஜய் படங்கள் மோதி கொள்வது போல் அப்போது ரஜினி கமல் படங்கள் மோதிக்கொண்டால்தான் ரசிகர்களை ஈர்க்கும். அந்த வகையில் ரஜினியின் மாப்பிள்ளையோடு ரிலீஸ் ஆன திரைப்படம்தான் வெற்றி விழா.

9cb55fce16377af340dd6e37cb2ff689

இரண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இசைஞானி இளையராஜாவின் இசை மட்டுமே. ஓப்பனிங் டைட்டிலிலேயே மாருகோ மாருஹா என்ற கொங்கணிப்பாடலை இளையராஜா பாட டைட்டில் போடப்படும். சுயநினைவு இழந்த கமல் தனது நினைவு திரும்பி தான் ஒரு காவல் அதிகாரி என்பதை அறிந்து வில்லன்களை களை எடுக்க முற்படுவது கதை. இடையே நண்பராக பிரபு சேர்ந்து கொள்ள படம் வித்தியாசமான முறையில் இயக்கப்பட்டிருக்கும்.

சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த வில்லன் சலீம் கெளஸ் இப்படத்தில் கலக்கி இருந்தார். பலராலும் யார் இந்த வில்லன் என தேட வைத்தார்.

வெற்றிவேல் உன்னை துண்டு துண்டு கட் பண்ணி என இவர் ஸ்டைலாக வில்லத்தனம் காட்டி மிரட்டி இருப்பார்.

பாடல்கள் ஹிட் என்றாலும் படத்தின் முக்கிய பாடலாக மாறிப்போனது மாருகோ மாருகோ என்ற பாடல் படம் வருவதற்கு முன்பும் சரி பின்பும் சரி சில வருடங்கள் இந்த பாடல் தொடர்ந்து டீக்கடைகள்,பஸ் ஸ்டாண்ட்கள்,சலூன் கடைகள், மளிகைகடைகள் என எல்லாவற்றிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது இப்பாடல் தமிழ் சினிமாக்களில் வந்த மிகப்பெரிய சாதனை ஹிட் பாடல் என்று கூட சொல்லலாம்.

இப்படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதாப்போத்தன் இப்படத்தை இயக்கி இருந்தார்.

கதாநாயகிகளாக குஷ்பு, அமலா, சசிகலா நடித்திருந்தனர். இதுவும் மாப்பிள்ளையோடு சேர்ந்து நானா நீயா என்ற வகையில் போட்டி போட்டு 175 நாட்கள் ஓடிய படமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன