கடந்த 1991ம் ஆண்டில் வெளிவந்த தீபாவளி ரஜினி கமல் ரசிகர்களுக்கு பேரின்பமான தீபாவளி. ரஜினி நடிப்பில் தளபதி திரைப்படமும், கமல்ஹாசன் நடிப்பில் குணா படமும் இந்த தீபாவளிக்கு வெளியானது.
இதில் தளபதி படம் மிகப்பெரும் இயக்குனராக அறியப்பட்ட மணிரத்னத்தின் இயக்கத்தில் வந்த படமாகும். இளையராஜா இசை என பெரிய டீம். அரவிந்த்சாமி இப்படத்தில் அறிமுகமாகி இருந்தார். நட்புக்கு இலக்கணமாக இப்படம் அறியப்பட்டது. இன்று வரை இப்படம் பேசப்படுவதற்கு காரணம் ரஜினி, மற்றும் மம்முட்டியின் ஒற்றுமையான நடிப்புதான் காரணம்.
அதே நேரத்தில் தீபாவளிக்கு வந்த குணா படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் படம் வெற்றி அடையவில்லை. கமல் இப்படத்துக்காக கொடைக்கானலில் கண்டுபிடித்த குகை, குணா குகை என இன்று மிகப்பெரிய சுற்றுலா ஸ்தலமானது இப்படத்தின் மிகப்பெரும் சாதனை.
இளையராஜா இசையமைத்து இருந்தார்.படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. குறிப்பிடத்தக்கது. மனநிலை பாதித்தவர் போல் வரும் கமல்ஹாசனின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது.
கமல், ரேகா, ஜனகராஜ் என பலர் இருந்தாலும் கதாநாயகி உட்பட அந்நியப்பட்ட ஹிந்தி பிரபலங்கள் பலர் இப்படத்தில் அதிகம் இருந்ததும் தொய்வான திரைக்கதையாலும் இப்படம் வெற்றியை பெறவில்லை.
ஆனால் லேட் ஹிட் என்பது போல படம் வந்து பல வருடம் கழித்து இன்றைய தலைமுறையினரால் கூட இப்படம் சிலாகித்து பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு வந்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்களாகும் தளபதி மெகா ஹிட், குணா, நல்ல நடிப்புக்காக விமர்சனங்களால் பேசப்பட்டது.