நடிகர் சிவக்குமார் நடித்த கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், ஆணிவேர், ஆயிரம் முத்தங்கள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் தயாரிப்பாளர் திருப்பூர் மணியின் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் ஆகும்.
தயாரிப்பாளர் திருப்பூர் மணி கடந்த 2016ம் ஆண்டு மறைந்தார். இவர் கொங்கு மண்ணின் நாயகர்களான சிவக்குமார் மட்டுமின்றி சத்யராஜை வைத்தும் விடிஞ்சா கல்யாணம், வாழ்க்கை சக்கரம், அண்ணா நகர் முதல் தெரு, சின்னத்தம்பி, பெரிய தம்பி, உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். 1994ல் வெளியான வண்டிச்சோலை சின்ராசு படத்துக்கு பிறகு இவர்களது நிறுவனம் அப்டேட்டாக இல்லை . பல ஆண்டுகளாக இவர்கள் படம் எதுவும் தயாரிக்கவில்லை.
அதே போல் கொங்கு மண்ணில் இருந்து தமிழ் சினிமாக்களை இயக்கிய முக்கிய இயக்குனர்களான மணிவண்ணன், பாலு ஆனந்த் உள்ளிட்டவர்கள் இயக்கிய படங்களைத்தான் திருப்பூர் மணி அதிகம் தயாரித்துள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் எந்த சிவக்குமாரை வைத்து ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட சாதனைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்ததோ அதே தயாரிப்பாளரின் மகன் விவேக் தயாரித்துள்ள கைதி படத்தில் சிவக்குமார் மகன் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளார் காலம் சென்ற திருப்பூர் மணியின் மகன் விவேக்
தந்தை சிவக்குமாரை வைத்து எப்படி வெற்றிப்படங்களை இயக்கி தயாரித்தார்களோ அதே வெற்றி செண்டிமெண்ட் சிவக்குமாரின் மகன் கார்த்திக்கும் கைதி படம் மூலம் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.