சுர்ஜித்தின் மரணம் வேதனை தருவதாக உள்ளது. இன்று அக்டோபர் 29 என்னுடைய பிறந்த நாளை அதனால்தான் நான் கொண்டாடவில்லை.
நாட்டில் எத்தனையோ சுர்ஜித்கள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள் என கூறியுள்ள ராகவா லாரன்ஸ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். சுஜித்தை போல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஏதாவது ஒரு பிள்ளையை தத்தெடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படி செய்தால் அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன், என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.