மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் கைதி படத்தை இயக்கியுள்ளார். படம் ரிலீஸானதில் இருந்து செம மாஸாக சென்று கொண்டிருக்கிறது. அனைவரும் இப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில் படம் பார்ப்பதற்கு விறு விறுப்புடன் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. லாரி பயணத்தோடு சேர்ந்து நம்மை ஒன்ற வைக்கிறது. ஆனால் அதில் இயக்குனர் செய்த தவறு என்னவென்றால் ஹீரோ எல்லோரையும் காட்டுத்தனமாக அடிக்கிறார் எதிரிகள் அனைவரும் தெறித்து ஓடுகின்றனர் . அதிலேயே லாஜிக் இல்லை என்றாலும் ஹீரோயிசம் அப்படித்தான் இருக்கும் என லாஜிக் இல்லாமல் பார்க்கலாம். ஆனால் அதற்கு அடுத்தபடியாக தேவையில்லாமல் கதாநாயகன் கார்த்தியை அரிவாள், ஆயுதங்களால் வெட்டு வாங்குவது போல் காண்பித்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிராளிகளுடன் கடுமையாக போராடுவது போல் காண்பித்திருக்கலாம். அவர் வெட்டு, குத்து என வாங்கி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட எழுந்து சண்டையிடுவது எல்லாம் நம்ப முடியாத காட்சிகள். படத்தின் திரைக்கதையில் பெரிய மைனஸ் என்றால் இப்படியான காட்சிகளை கூறலாம்.