பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் தமிழ்க் குடும்பங்களின் மனம் கவர்ந்த இயக்குனர் சேரன்.
இவர் ஏன் உள்ளே போனார்? பெயர் கெட்டு விடுமோ? என்று பயந்த பார்வையாளர்களே அதிகம், ஆனால் சேரன் மிக ஒழுக்கமானவராக நேர்மையானவராக இருந்து ஒழுக்கமானவர் விருது பெற்றார்.
வெளியே வந்த அவர் பெரிதாக எந்தப் பேட்டியும் கொடுத்ததாக தெரியவில்லை. இந்தநிலையில் இவர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் லாஸ்லியா மீதான அன்புகுறித்து பேசினார். அதாவது, “அப்பா என்ற உறவும் அம்மா என்ற உறவினைப் போன்று சிறப்பானது.

நான் சமீபத்தில் பிக் பாஸில் கூட அப்பாவாக இருந்தேன், அது எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன். லாஸ்லியாவிடம் அப்பாவாக நான் காட்டிய பாசம் பொய்யானது கிடையாது.
பொய்யாக நான் காட்டி இருந்தால் வாழவே தகுதி அற்றவனாக கருதுகிறேன்” என்று கவின்- லாஸ்லியா ஆர்மியினருக்கு பதிலடி கொடுத்தார்.
