பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் ஜூன் 23 ஆம் தேதி துவங்கியது, இப்போட்டி கடந்தவாரம் 106 நாட்கள் முடிவடைந்தநிலையில் பிரமாண்ட இறுதிவிழாவோடு முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதல் பரிசினைப் பெற்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ், அவருக்கு 50 லட்சம் பரிசுத் தொகையும் பதக்கமும் வழங்கப்பட்டது.
உள்ளே இருந்தபோது அனைவரையும் தன் பாடலால் கவர்ந்தவர் முகின் ராவ், புதிது புதிதாக பாடல்களை அவ்வப்போது பாடுவது இவரது வழக்கமாகும்.
இதன்மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு, காலேஜ்களில் இது இப்போது ட்ரெண்டான ஒரு பாடலாக இருந்துவருகிறது. அந்தவகையில் இவர் பாடிய சத்தியமான் நான் சொல்லுறேன்டி பாடல் பிரபலமாகிப் போக, பலரும் டிக் டாக் வீடியோவாக இதனை வெளியிட்டு உள்ளனர்.
அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பாவனா இந்தப் பாடலை ரசித்து, பாடலைப் பாடி இசையமைத்து உள்ளார்.
இது தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.