106 நாட்களுடன் இந்த நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.
நேற்று பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து பேசினர், அப்போது பலரும் தங்களது குடும்பத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசினர்,
அதில் ஒரு பார்வையாளர் கூறுகையில், “தன் கணவர் கப்பலில் வேலை பார்ப்பதாகவும், 4 மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார் என்றும் கூறினார். மேலும் வழக்கறிஞராக இருக்கும் எனக்கு என் கணவருடன் பேச நேரமில்லை என்றார். சாண்டி வருத்தப்படும்போது என் கணவர் எங்களுக்காக படும் கஷ்டங்களைப் புரிந்துகொண்டேன் என்றார்.
ஒரு சிறுமி எழுந்து, தன் தந்தை காலையில் 6மணிக்கு வேலைக்குச் சென்றால், மாலை நாங்கள் தூங்கிய பின்புதான் வருவார், அவருக்கு எங்கள்மேல் பாசம் இல்லை என்று நினைத்தோம், ஆனால் லோஸ்லியா அக்காவின் தந்தை வந்தபோது அது புரிந்தது என்றார்.
அடுத்து ஒரு பார்வையாளர் நான் அனைவரையும் எளிதில் சாண்டிபோல் கலாய்க்க கூடியவன், மோகன் வைத்யா வருத்தப்படும்போதுதான் மற்றவர்களை கலாய்க்கும்போது அவர்களின் மனதினைக் காயப்படுத்தாமல் கலாய்க்க வேண்டும் என்பதனை உணர்ந்தேன் என்று கூறினார்.