106 நாட்களுடன் இந்த நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.
பினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டிராபியை ரித்விகா மேடைக்கு கொண்டு வந்தார். அப்போது யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்விக்கு லாஸ்லியா ஜெயிப்பார் என்று பதில் கூறினார்.
கமல் ஹாசன் இவ்வளவுதூரம் பயணித்த போட்டியாளர்கள் இந்த கோப்பையை தொட்டு பார்க்க வேண்டும் என்று கூற, ரித்விகா அதனை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு சென்றார்.
அவரது வருகையினால் டண்டனக்கா பாடல் பாடி பாட்டிக் காட்டி ஆடினர், அடுத்து போட்டியாளர்கள் அவருக்கு காஃபி போட்டுக் கொடுத்தனர்.
அடுத்து கமல் ஹாசன் கூறியபடி, ஒரு போட்டியாளரை வெளியே அழைத்துவருமாறு கூற, கமல் ஹாசன் மேடையில் எவிக்ஷன் கார்டை எடுத்துக் காட்டினார்.
அதில் ஷெரின் பெயர் இருந்தது, அவரும்போது அவரை அழைத்துவருமாறு கமல் ஹாசன் கூற டிராபியுடன் ஷெரினை, ரித்விகா வெளியில் அழைத்து வந்தார்.
வெளியே வந்து கமல் ஹாசன் மற்றும் குடும்பத்தினரிடம் ஷெரின் பேசினார்.
.