106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.
அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் கமல் ஹாசன். அதாவது முதல் நபராக கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது.
அவர் பணத்தோடு வெளியேறாமல் இருந்திருந்தால் இறுதிப் போட்டியில் இருந்திருப்பார். போட்டியின் நிலையே மாறியிருக்கும் என்று கூறினார்.
வனிதாவிற்கு தைரியமானவர் என்ற விருது வழங்கப்பட்டது. வனிதா, அந்த விருதை தனது மகள்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, கமலும் அவரது 2 மகளை அழைத்து வழங்கினார்.
.அடுத்து இந்த விழாவன்று எனக்கு 39 ஆவது வயது முடிவடைந்து 40 வயது தொடங்குகிறது, பிறந்தநாள் பரிசாக உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்டார். கமலும் அதற்கு சரி என்று சொன்னார்.
சேரனுக்கு பிக் பாஸ் வீட்டின் ஒழுக்கமானவர் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் இதுபோன்ற விஷயங்களை கமல் ஹாசனிடம் இருந்தே கற்றுக் கொண்டதாக்க் கூறினார்.