106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.
ஏற்கனவே வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடினர். ஏய் மச்சான் என்ற பாடலுக்கு அபிராமி அழகாக டான்ஸ் ஆடினார்.
அவரை அடுத்து சிறிது நேரத்தில் ரௌடி பேபி பாடலுக்கு சாக்ஷி டான்ஸ் ஆடினார்.
இதற்கிடையே விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் குழுவினர், பிக் பாஸ் போட்டியாளர்களைபோல் வேடமிட்டு அவர்களை கலாய்த்து தள்ளிவிட்டனர். சேரன், மீரா, வனிதா, கஸ்தூரி, அபிராமி, ஷெரின், சாக்சி, லோஸ்லியா, சாண்டி, முகின், தர்சன், கவின் ஆகிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து பகிரங்கமாக கலாய்த்தனர்.
அடுத்து வந்தாள் மகாலட்சுமி பாடலுக்கு அதிரடி ஆட்டம் போட்டார் கஸ்தூரி, அவரை அடுத்து கஸ்தூரிக்கு டஃப் கொடுக்கும்படியாக ஆடினார் வனிதா விஜயகுமார், உண்மையில் பலரும் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.