அட்டகாசமான விவோ 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்..!

இந்தியாவில் தற்போது 5ஜி வசதி பயனார்களுக்கு கிடைத்து வரும் நிலையில் அனைவரும் 5ஜி மொபைல் போனுக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் விவோ நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அட்டகாசமான 5ஜி மொபைல் ஒன்றை வெளியிட்ட நிலையில் அந்த மொபைல் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மொபைலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

விவோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் vivo V27 5G என்ற ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 8ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 32,999 என்றும், 12ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 37,999 என்றும் விற்பனையாகிறது.

ரூ.11,000 தள்ளுபடியில் கிடைக்கும் Xiaomi 11 Lite NE 5G.. முழு விவரங்கள்..!

vivo V27 5G ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இதில் MediaTek Dimensity 900 பிராஸசர் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்பி எடுக்க 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

vivo V27 5G ஸ்மார்ட்போனில் 4600mAh பேட்டரி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் 5G இணைப்பு வசதிகள் உள்ளன.

பழைய மொபைலை விற்கும் முன் ரீசெட் செய்வது எப்படி? முழு விவரங்கள்..!

vivo V27 5G இன் முழு விவரக்குறிப்புகள் இங்கே:

* 6.78-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே (1080 x 2400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
* MediaTek Dimensity 900 பிராசசர்
* 8 ஜிபி/12 ஜிபி ரேம்
* 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
* 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
* 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
* 4600mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
* 5G, 4G LTE, Wi-Fi 6, புளூடூத் 5.2, GPS, NFC வசதிகள்

ரூ.8499 விலையில் ஒரு சூப்பரான ரெட்மி ஸ்மார்ட்போன்.. தவறவிடாதீர்கள்..!

நல்ல டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பிராசசர் மற்றும் திறன் கொண்ட கேமராக்கள் கொண்ட ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போன் வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக vivo V27 5G ஸ்மார்ட்போனை தேர்வு செய்யலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...