நடிகையின் கன்னத்தில் நிஜமாகவே அறைந்த சிவாஜி! அப்படி ஒரு கோவமா?

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படங்கள் படமாக்கப்பட்டு படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து பாடல் காட்சிகள் முடிந்து திரையில் திரைப்படமாக வெளியாக பல நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. அப்படி ஒரு திரைப்படம் உருவாகும் காலங்களில் பல சுவாரசியமான காட்சிகள் படப்பிடிப்பு தளங்களில் நிகழ்ந்துள்ளது. சில எதிர்பாராத நிகழ்வுகளும் படப்பிடிப்பு தளங்களில் நிகழ்ந்து படப்பிடிப்பையே மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் சிவாஜி நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னையே மாற்றிக் கொண்டு நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தன்னுடைய முழுமையான நடிப்பை மட்டுமே ஒவ்வொரு படங்களிலும் அவர் வெளிக்காட்டி உள்ளார். மேலும் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சிகளும் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கிடும் நடிகர்களில் அவரும் ஒருவர். அந்த அளவிற்கு நடிப்பின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமே அதற்கு ஒரு காரணம்.

இப்படி இருக்க நடிகர் திலகம் பெரும்பாலான காட்சிகள் நடிக்கும் பொழுது டூப் கலைஞர்களை பயன்படுத்துவதே இல்லை. சண்டைக் காட்சியாக இருந்தாலும் சரி சவாலான சில தத்ரூபமான காட்சியாக இருந்தாலும் சரி சிவாஜி அவர்களே சிரமங்களை பொருட்படுத்தாமல் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அப்பொழுதுதான் திரையில் பார்க்கும் ரசிகர்களின் மனதை நாம் திருப்தி படுத்த முடியும் என்ற காரணத்தை மையமாக வைத்து சிவாஜி அவர்கள் எந்த டூப் கலைஞர்களையும் பெரிதளவு தன் படத்தில் இணைத்துக். கொள்ளவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சிவாஜி அவர் நடித்த ஒரு படத்தில் துணை நடிகையின் கன்னத்தில் அறைவது போல் ஒரு காட்சி இடம் பெற அதற்கு உண்மையாகவே சிவாஜி அந்த நடிகையின் கன்னத்தில் அடிக்க சில நேரங்கள் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்த முழு தகவலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1968 ஆம் ஆண்டு ஏ பி நாகராஜன் இயக்கத்தில் வெளியான வெளியான திரைப்படம் தான் திருமால் பெருமை. இந்த படத்தில் கதாநாயகனாக சிவாஜி நடித்திருப்பார் கதாநாயகியாக பத்மினி நடித்திருப்பார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் சிவாஜி படத்தில் நடித்த நடிகையை உண்மையாக அறிந்துள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் சம்பவம் செய்ய காத்திருக்கும் தளபதி விஜய்!

அதாவது இந்த படத்தில் சிவாஜி குட்டி பத்மினி அவர்களை கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கும். திருமால் பெருமை படப்பிடிப்பின் போது சிவாஜி தலையில் ஒட்டு முடிகளை வைத்துக்கொண்டு மதிய உச்சி வெயிலில் மேக்கப்புடன் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது குட்டி பத்மினி அவர்கள் வேறொரு படப்பிடிப்பில் ரொம்ப பிசியாக இருந்தார். அதன் பின் சிவாஜி இந்த படத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்ததை அடுத்து குட்டி பத்மினி இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்தடைந்தார்.

அப்போது குட்டி பத்மினியை நேரில் பார்த்த சிவாஜி என்ன ரொம்ப பிசியோ என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அப்படியெல்லாம் இல்லை என கண்கள் கலங்கியபடி கூறிய குட்டி பத்மினி படப்பிடிப்பிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்பொழுது சிவாஜி அவர்கள் குட்டி பத்மினியின் கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் குட்டி பத்மினி அவர்கள் சிவாஜி தன்னை மெதுவாக தான் அடிப்பார் என்று நினைத்துக் கொண்டு படத்தில் நடித்தார்.

ஆனால் சிவாஜி உண்மையாகவே அறைந்துள்ளார். அதை பார்த்த குட்டி பத்மினி அதிர்ச்சியில் ஒன்றும் பேசாமல் உறைந்துள்ளார். சிவாஜி அடித்த வேகத்தில் குட்டி பத்மினி தன் காதில் அணிந்திருந்த கம்மல் கூட கழண்டு விழுந்திருக்கும். அந்த அளவிற்கு தத்ரூபமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள். மேலும் சிவாஜி நடிப்பில் வெளியான இந்த திரைப்படமும் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews