தளபதி விஜய் நெற்றியில் இதை கவனிச்சீங்களா? லியோ வெற்றி விழாவில் வைரலாகும் தளபதி விஜய் போட்டோ

தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடைய வெளியாகி சக்கைப் போடு போட்டு வரும் படம் தான் லியோ. அன்பறிவின் சண்டைக் காட்சிகளில் அசத்தியிருக்கும் விஜய்யின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சட்டை ஒழுங்கை காரணம்  காட்டி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தற்போது படம் வெளியாகி உலகெங்கிலும் 540 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக வெற்றி விழாவிற்கு தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நவம்பர் 1-ல் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  ஏற்கனவே விஜய் அரசியல் பிரவேசம் குறித்து தமிழகமெங்கம் அவரது ரசிகர்கள் போஸ்டர்களில் பஞ்ச் வசனங்களைத் தெறிக்க விட லியோ வெற்றி விழாவில் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்!

இந்நிலையில் லியோ வெற்றிவிழாவிற்கு தளபதி விஜய் வந்த போது அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். ஏனெனில் அவர் நெற்றியில் சிவப்பு நிறத்தில் குங்குமம் பூசி வந்திருந்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவரான ஜோசப் விஜய் இவ்வாறு வந்தது குறித்து சமூக ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கின.

மேலும் விஜய் லியோ என்ற கிறிஸ்தவப் பெயரிலும், பிகில் படத்தில் மைக்கேல் என்ற பெயரிலும் தன்னுடய கேரக்டர் பெயர்களை உருவாக்கியிருப்பதையும் நாம் அறிவோம். இந்நிலையில் அவர் நெற்றியில் திலகமிட்டு வந்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது என்றே சொல்லாம்.

லியோ வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.  ரசிகர்கள சோஷியல் மீடியாக்களில் கவனம் செலுத்தாமல் வீட்டையும், நாட்டையும் கவனிக்குமாறும் அறிவுரை கூறினார். விழாவல் அவர் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என்றும் அதேபோல் தளபதி என்றால் உங்களுக்காக பணி செய்ய வந்துள்ளதையும் சுட்டிக் காட்டி சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு End Card போட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.