“நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு…“ சுப்ரீம் ஸ்டார் முதல் மாஸ்டர் மகேந்திரன் வரை தலையெழுத்தை மாற்றிய நாட்டாமை

1990களின் இடைப்பட்ட காலத்தில் பஞ்சாயத்து சீன் இல்லாத தமிழ் சினிமாவே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கிராம ஜமீன்தார், மிராசுதார், நாட்டாமை  போன்றவற்றைத் தழுவி ஏராளமான படங்கள் வந்தது எனலாம். சூப்பர் ஸ்டாருக்கு ஓர் எஜமான், உலக நாயகனுக்கு தேவர் மகன், கேப்டன் விஜயகாந்த்துக்கு சின்னக் கவுண்டர், என திரையுலக ஜாம்பவான்களையே பஞ்சாயத்து சீன்கள் ஹிட் கொடுக்க அந்த ராசி சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கும் கை கூடியது.

அதுவரை சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த சரத்குமார் நாட்டாமை கொடுத்த வெற்றியில் தமிழ்த் திரையுலகமே அவரை வியந்து பார்த்தது. கே.எஸ்.ரவிக்குமார் நாட்டாமை திரைப்படத்தை இயக்குவதற்கு முன் விஜயக்குமார் ரோலில் மம்முட்டியை நடிக்க வைப்பதாக இருந்தது. மேலும் குஷ்புவும் வயதான அண்ணி ரோலில் நடிக்க முதலில் மறுத்தார். பின்னர் கதையின் ஆழம் புரிந்து நடிக்க ஒப்புக் கொண்டார்.

குஷ்பு இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றால் கொட்டாம்பாக்கு என்ற ஜானகியின் குரலில் உருவான இந்தப் பாடலை நாம் இவ்வளவு கொண்டாடியிருக்க மாட்டோம்.

சரத்குமார் 2 வேடங்களில் நடிக்க, மூத்த நாட்டாமை கேரெக்டரில் விஜயக்குமார் அசல் கிராமத்து நாட்டாமையாக கெத்து காட்டியிருப்பார். விஜயக்குமாருக்குப் பின்னர் நாட்டாமையாக வரும் அண்ணன் சரத்குமார் அமைதியான நடிப்பில் ஆழமான கருத்துக்களைச் சொல்லி ரசிகர்களை கவர்ந்திழுப்பார். மேலும் மீனா, குஷ்பு போன்றோர் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்ய நாட்டாமை வரலாற்றுச் சாதனை படைத்தது.

ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த அதிரடி திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

கவுண்டமணி – செந்தில் காமெடி

எத்தனையோ படங்களில் கவுண்டமணி செந்தில் ஜோடி நடித்தருந்தாலும் இந்தப் படம் சற்று ஸ்பெஷல். ஏனெனில் இங்கு கவுண்டமணி அடிவாங்கும் கேரக்டரிலும், செந்தில் அப்பாவாகவும் நடித்து கிளாசிக் காமெடி காட்சிகளை உருவாக்கினர். இந்தப் படத்தில் கவுண்டமணி பேசும் டயலாக்குகள் இன்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்-க்கு தீனியாக அமைந்துள்ளது.

மாஸ்டர் மகேந்திரன் பஞ்சாயத்து சீனில் குட்டி பையனாக வந்து திரைக்கதையில் முக்கிய மாற்றத்திற்கு காரணமாக இருப்பார். ”ஆமா நான் பார்த்தேன்.. அந்த அக்காவ” என்று மழலைக் குரலில் அவர் பேசும் போது கதையின் தன்மையையே இந்த சீன் புரட்டிப் போட்டது என்று கூறலாம். பொன்னம்பலமும் வில்லத்தனத்தில் தாய்க்கெழவி என்று மிரட்டி தற்போது திருச்சிற்றம்பலத்தில் பாடல் வரைக்கும் நாட்டாமையை நினைவுபடுத்தியது.

இவ்வளவு ஸ்பெஷல் நிறைந்த நாட்டாமை படம் 29 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் நடிகர் சரத்குமார்  சோசியல் மீடியாவில் பதிவிட்டு நாட்டாமை திரைப்படத்தை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சக நடிகர் நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews