மீண்டும் டைட்டானிக் புரிந்த சாதனை : அடேங்கப்பா மெனுகார்டே இத்தனை லட்சமா?

ஆடம்பர சொகுசுக் கப்பலான ‘டைட்டானிக்‘ தனது முதல் பயணத்தின் போதே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலைப் பற்றியும், அதில் சில கற்பனைக் காதல் காட்சியையும் கலந்து ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் என்ற பிரம்மாண்ட படத்தை எடுத்து உலக சினிமாவையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தார்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டானிக் கப்பல் முழுக்க முழுக்க மேல்தட்டு மக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. வெறும் நான்கு நாட்கள் மட்டுமே பயணம் செய்த இந்தக் கப்பல் பனிபாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் பல நூறுமக்கள் செத்து மடிந்தனர்.

தப்பித்துச் செல்லக் குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே, பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். இந்த கப்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் டைட்டானிக்.

எத்தனை ஆண்டுகளானலும் டைட்டானிக் படத்தின் தாக்கம் குறையாது. 1997-ல் வெளிவந்த இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலர் நடித்தனர் என்பதை விட வாழ்ந்தனர் என்றே கூறலாம். உலக அளவில் இந்தப் படமே அப்போது மிகப் பெரிய பட்ஜெட்படம் என்ற பெருமையைப் பெற்றது.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமா? அந்தக் காலத்துல இவர் இல்லாத படமே இல்ல..!

அதன்பின் ஜேம்ஸ் கேமரூன் அவதார் 1,2 ஆகிய படங்களை எடுத்து சினிமா தொழில்நுட்பத்தின் உச்சிக்கே சென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். நவீனத்துடன், சென்டிமென்டையும் கலந்து படங்கள் எடுத்து கல்லா கட்டுவதில் வல்லவரான ஜேம்ஸ் கேமரூன் திரைப்பட உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

டைட்டானிக் படத்தின் காதல் காட்சிகளை நகலெடுக்காத சினிமாக்கள் மிகவும் குறைவே என்று சொல்லலாம். ஹீரோவின் ஹேர் ஸ்டைல் முதல் அனைத்துமே இதில் பிரபலமானவை. தற்போது இந்த சாதனைகளை மிஞ்சும் அளவிற்கு டைட்டானிக் கப்பல் புதிய ரொக்கார்டைப் படைத்துள்ளது.

அதன்படி டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன் பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு உணவின் மெனுகார்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் ஏலம்போன இந்த மெனுகார்டு கிட்டத்தட்ட 84 லட்சம் அளவிற்கு ஏலம் போயுள்ளது. உலக அளவில் இப்படி ஒரு உணவு சம்பந்தப்பட்ட மெனுகார்டு இவ்வளவு தொகைக்கு ஏலம் போது இதுவே வரலாற்றில் முதன்முறை ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews