ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி.. அதிர்ச்சி வீடியோ..!

அமெரிக்காவில் மாணவி ஒருவர் வகுப்பு நேரத்தில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவரது செல்போனை ஆசிரியர் பிடுங்கினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு காலத்தில் ஆசிரியர் மீது மதிப்பும் மரியாதையும் ஒரு பயமும் மாணவ மாணவிகளுக்கு இருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது ஆசிரியரை திருப்பி அடிக்கும் அளவுக்கு மாணவர்களின் ஒழுக்கம் கெட்டுவிட்டது என்றும் ஆசிரியர் தான் நமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒரு நபர் என்பதை புரிந்து கொள்ளாத மாணவர்கள் தற்போது ஆசிரியருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அமெரிக்காவில் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது பாடத்தை கவனிக்காமல் செல்போனை கவனித்துக் கொண்டிருந்த மாணவியை கண்டித்த ஆசிரியர் அவரது செல்போனை பிடுங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி தனது செல்போனை கொடுக்குமாறு திரும்பத் திரும்ப கேட்டார். ஆனால் ஆசிரியர் செல்போனை கொடுக்க மறுக்கவே திடீரென தனது பாக்கெட்டில் இருந்த பெப்பர் ஸ்பிரே எடுத்து ஆசிரியரின் முகத்தில் அடித்தார்.

இதனால் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து போனார். இதனை அடுத்து மேலும் ஒரு முறை அந்த மாணவி ஆசிரியரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்ததால் சக ஆசிரியர்கள் அந்த மாணவியை கண்டித்தனர். ஆனால் அந்த மாணவி திரும்பத் திரும்ப தனது செல்போனை அவர் திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் அந்த மாணவிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். வகுப்பு நேரத்தில் பாடத்தை கவனிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தது மாணவியின் தவறு என்றும் அதை கண்டிப்பது ஒரு ஆசிரியரின் கடமை என்றும் ஆனால் ஆசிரியர் மீது ஒழுக்கம் கெட்ட தனமாக இப்படி பெப்பர் ஸ்ப்ரே அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews