விஜயகாந்த் நடித்த முதல் படமே ‘ஏ’ சர்டிபிகேட்… இனிக்கும் இளமையின் மோசமான விமர்சனம்…!!

நடிகர் விஜயகாந்த் தமிழ் திரை உலகில் பல சாதனைகள் செய்திருந்தாலும் பல வேடங்களை ஏற்று நடித்திருந்தாலும் அவரது முதல் படம் ஏ சர்டிபிகேட் வாங்கி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

திரையுலகில் உள்ளவர்கள் பலர் அந்த படத்தை பார்த்து இயக்குனருக்கும் அந்த படத்தில் நடித்தவர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிராமண சமூகத்தை அந்த படம் மோசமாக கிண்டல் செய்தது என்றும் ஒரு திரைப்படம் எவ்வாறு உருவாக்க கூடாது என்பதற்கு சரியான உதாரணம் தான் இந்த படம் என்றும் பலர் விமர்சனம் செய்தனர்.

விஜயகாந்தின் முதல் படமே கடும் விமர்சனத்தை பெற்றாலும் அந்த படத்தில் விஜயகாந்தின் நடிப்பு மட்டும் ஓரளவு பாராட்டப்பட்டது. அந்த படம் தான் இனிக்கும் இளமை. எம்ஏ காஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகன், நாயகியாக சுதாகர் மற்றும் ராதிகா நடித்திருந்தனர். ஏற்கனவே கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்த படம் தான் இனிக்கும் இளமை.

விஜயகாந்த் படத்தின் ரீமேக்கில் நடித்த ரஜினிகாந்த்.. இரண்டு படங்களின் ரிசல்ட் என்ன தெரியுமா?

inikkum ilamai

இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் வில்லனாக அருண் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். விஜயகாந்த் நடிப்பு மட்டுமே இந்த படத்தில் பிளஸ் ஆக இருந்தது. கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு சங்கர் – கணேஷ் இசை அமைத்திருந்தனர். இந்த படம் படுமோசமாக விமர்சனம் செய்யப்பட்டதை அடுத்து வசூல் அளவிலும் வெற்றி பெறவில்லை. இதுபோன்ற படம் வெற்றி பெறக் கூடாது என்று ரசிகர்களும் விரும்பினர்

இந்த படத்துக்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தனர் என்பதும் ஒரு சில காட்சிகளை வெட்டி தள்ளினர். ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள் மற்றும் பிராமண சமூகத்தை கிண்டல் செய்யும் காட்சிகள் என சர்ச்சைக்குரிய காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்று இருந்தது. இந்த படம் முதல் முதலில் திரையிடப்பட்ட பின் மீண்டும் திரையிட யாரும் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

விஜயகாந்த் ஜோடியாக மட்டும் 6 படங்கள்.. நடிகை விஜி வாழ்க்கையில் விளையாடிய விதி..!

முதல் படமே ‘ஏ’ சர்டிபிகேட் பெற்று கடுமையான விமர்சனம் பெற்றாலும் விஜயகாந்துக்கு அடுத்தடுத்து நல்ல படங்கள் கிடைத்தது. மேலும் விஜயகாந்த் வில்லனாக நடித்த படங்கள் இரண்டு தான், அதில் ஒன்று இனிக்கும் இளமை இன்னொன்று ஓம் சக்தி.

inikkum ilamai1

அதன் பிறகு அவருக்கு வில்லனாக நடிக்க ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்த போதிலும் அவர் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான முரட்டுக்காளை திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர் நிராகரித்தார்.

ரஜினியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த் பட நடிகை! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி தான்!

ஆரம்ப காலகட்டத்தில் திரையுலகில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்த போது அவர் கிடைத்த கேரக்டர்களை நடித்தார். அவ்வாறு நடித்தது தான் இனிக்கும் இளமை மற்றும் ஓம் சக்தி ஆகிய படங்களில் வில்லனாக நடித்தது. அதன் பிறகு அவர் தனக்கென ஒரு பாணியை கையாண்டு ரசிகர்களை பெற்ற பின்னர் வில்லனாக நடிக்க மறுத்தார். அதன் பிறகு அனைத்து படங்களிலும் பாசிட்டிவ் கேரக்டர்களில் மட்டுமே நடித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...