பித்ரு தர்ப்பணமும் தை முதல் நாளும்!

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சித்தர் ஒருவருடைய பரம்பரையில் பிறந்தவர்கள்தான். எனவே மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் அவர்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது கடமையாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிறந்து வளர்ந்த மனிதர்கள் நம்முடைய நாட்டில் உள்ள காசிக்கு வருகைதந்து அடிக்கடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ் கோடிக்கும் வந்து தர்ப்பணம் செய்ய இருக்கிறார்கள்.

2022 எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கலியுகத்தில் இரண்டே இரண்டு ஆன்மிக கடமைகளை அடிக்கடி செய்துவிட்டு அவர்களுடைய வேலையை அல்லது தொழிலை பார்த்தாலே போதும் என்றுதான் சித்தர் பெருமக்கள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.

குலதெய்வ வழிபாடு

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அல்லது வளர்பிறை பஞ்சமி அன்று குலதெய்வம் கோயிலுக்கு செல்ல வேண்டும். குலதெய்வம் கோயிலில் உள்ள ஒவ்வொரு சுவாமி சன்னதியிலும் படையல் வைக்க வேண்டும். 90 நிமிடங்கள் வரை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வீடு திரும்ப வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று குல தெய்வத்தை வழிபட்டு வருவதன் மூலமாக நமக்கு இன்று வரை இருந்து வந்த கடன், நோய், எதிரி வம்பு வழக்கு, தேவையில்லாத பிரச்சினைகள் போன்றவை படிப்படியாக குறைந்து காணாமல் போய்விடும்.

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

நம்முடைய குல தெய்வம் நமக்கு வரம் தருவது அமாவாசை திதி அல்லது வளர்பிறை பஞ்சமி திதி அன்று மட்டுமே. அதனால்தான் இந்த இரண்டு திதிகளில் ஏதாவது ஒரு திதி அன்று குலதெய்வம் கோவிலுக்குச் சென்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலமாக அடுத்த சில வருடங்களில் மிகவும் வளமான வாழ்க்கை இதை பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் கிடைத்துவிடும்.

அடுத்தபடியாக ஒவ்வொரு மாதமும் ஒரு முறையாவது தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். அமாவாசை திதி அன்று தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் எந்த நாளிலும் தர்ப்பணம் செய்யலாம். விடியற்காலை 5 மணி முதல் மதியம் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து விடவேண்டும். ஒவ்வொரு முறையும் தர்ப்பணம் செய்து செய்த பிறகு கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் தர்பணம் செய்ததற்கான பலன் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

நமது ஆன்மீக பாரத நாட்டிற்கு அந்நியர்கள் உடைய ஆக்கிரமிப்பு வராமல் இருக்கும் வரை தினமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தார்கள். அதனால் குடும்பங்கள் ஆரோக்கியத்தோடும் செல்வச் செழிப்போடும் மற்றும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வாழ்ந்துவந்தனர். கடந்த எண்ணூறு ஆண்டுகளில் இது படிப்படியாக குறைந்து மாதம் ஒருமுறை “அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் போதும்” என்ற சூழ்நிலை உண்டானது. கடந்த 200 ஆண்டுகளில் அதுவும் முடியாமல் “ஆண்டுக்கு ஒரு முறையாவது தர்ப்பணம் செய்தால் போதும்” என்ற நிலை பரவி விட்டது.

எப்போது நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை குறைத்தோமோ அப்போது முதல் நமக்கு பல்வேறு விதமான குறைபாடுகள், வாழ்க்கை சிக்கல்கள், பற்றக்குறைகள், நிம்மதியற்ற தினசரி வாழ்க்கை வர ஆரம்பித்தன. இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் கடன் அல்லது நோய் அல்லது வம்பு வழக்கு அல்லது நிம்மதியற்ற வாழ்க்கை துரத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கான தீர்வு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மட்டுமே.

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

தினமும் நமது வீட்டில் நாம் தர்ப்பணம் செய்து வரலாம். நம்முடைய பெற்றோர்களாகிய தாய், தந்தையர் இருக்கும்போது நாம் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். நம்முடைய தாத்தா பாட்டிகள் இப்போது வாழ்ந்து கொண்டு இருந்தாலும் நாம் தர்ப்பணம் செய்யலாம். நம்முடைய அப்பா அம்மா அல்லது தாத்தா பாட்டி போன்றவர்கள் தான் தர்பணம் செய்ய வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து நம்மிடையே பரவி உள்ளது. அது தவறு.

நம்முடைய அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டிக்கு ஒருவேளை தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் அல்லது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு தெரியாமல் நாம் நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை பாவம் இல்லை தோஷமும் இல்லை. அது இயலாதவர்கள் மாதமொருமுறை அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வரலாம். (இயற்கையான முறையில் இறந்த முன்னோர்களுக்கு செய்யவேண்டிய தர்ப்பணத்திற்கு பிதுர் தர்ப்பணம் என்று பெயர். செயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு ஒருமுறை மட்டும் செய்ய வேண்டியது திலா ஹோமம் அல்லது தில தர்ப்பணம் என்று பெயர்.)

கடந்த 200 ஆண்டுகளாக ஒரு வருடத்தில் மூன்றே மூன்று முறை தர்ப்பணம் செய்தால் போதும் என்ற கருத்தும் பரவி விட்டது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை இந்த மூன்று நாட்களில் தர்ப்பணம் செய்தால் போதுமானது என்ற கருத்து பரவிவிட்டது. ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கடந்த 12 ஆண்டுகளாக தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும்.

தை முதல் நாள் தர்ப்பணம்

தை மாதம் முதல் நாள் அன்று நாம் நமது ஊரில் உள்ள பழமையான கோயில் வாசலில் காலையில் ஒரு சாது / ஏழைக்கு மதியம் ஒரு சாது / ஏழைக்கு இரவில் ஒரு சாது / ஏழைக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு அன்னதானம் செய்தால் அது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ததற்கு சமமான புண்ணியமாக மாறும்.

இப்படிப்பட்ட ஒரு வரத்தை கடந்த யுகங்களில் பல்வேறு ரிஷிகள், சித்தர்கள், யோகிகள் தவமிருந்து பித்ருக்களின் கடவுளாகிய மகாவிஷ்ணுவிடம் வரமாக வாங்கி உள்ளார்கள். எனவே இந்த வருடம் தை மாதம் முதல் நாள் 14.1.2022 வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கிறது. இந்த நாளில் உங்கள் ஊரில் உள்ள பழமையான கோயில் வாசலில் அன்னதானம் செய்யுங்கள்.

கோயில் இல்லாத நகர்புற கிராமப்புற மக்கள் உங்கள் ஊரில் உள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் செய்து செய்யுங்கள். அதுவே போதுமானது.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

இதையும் பாருங்கள்:

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews