வருகிறது குரோதி வருட தமிழ் புத்தாண்டு… எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது? பார்க்கலாமா..!

தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு பிறந்து விடும். பிறக்க உள்ள இந்தப் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது? வாங்க, பார்க்கலாம்.

2024 ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. அன்று வளர்பிறை சஷ்டி திதி. சஷ்டி விரதம் அதன் கூடுதல் சிறப்பு.

நவக்கிரகங்களின் உச்ச கிரகமாக இருக்கும் சூரியபகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும்போது தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.

மாதத்திற்கு ஒருமுறை தன் இடத்தை மாற்றுவார். இந்த வருஷம் சித்திரை மாதம் மேஷம் ராசியில் உச்சம்பெறுவார். அன்றைய தினம் தான் தமிழ்ப்புத்தாண்டு. இதில் சிறப்பு என்னவென்றால் குருபகவானுடன் சூரியன் அமர்கிறார். இப்படி இருக்கக்கூடிய இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கும்.

அந்த நிகழ்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி சித்திரை 1ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று நடக்கப் போகிறது. இந்த ஆண்டை குரோதி வருடமாகப் பிறக்கிறது.

பிறக்க உள்ள இந்தப் புத்தாண்டு பலருக்கும் நன்மை தருவதாகவே அமையுமாம். குறிப்பாக சூரியபகவானால் தோஷம் உள்ளவர்களுக்கு அது நீங்கி விடுமாம். குருபகவானுடன் சூரியபகவான் சேர்வதால் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அறிவுக்கூர்மை அதிகமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

தமிழ்ப்புத்தாண்டு அன்று சஷ்டி விரத தினம். அதனுடன் திருவாதிரை நட்சத்திரமும் வருகிறது.

ஏப்ரல் 13ம் தேதி மாலை 5 மணிக்கு சஷ்டி விரதம் பிறக்கிறது. மறுநாள் மாலை 4.47 மணிக்குத் தான் சஷ்டி விரதம் முடிகிறது.

தமிழ்ப்புத்தாண்டு அன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பூஜை செய்ய உகந்த நேரம். அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய செயல்கள் எல்லாமே நல்ல செயல்களாக இருக்கும்பட்சத்தில் அது நம் வாழ்க்கையை வளமாக்கும்.

சித்திரை முதல் நாளில் இருந்தே நாம் செய்யக்கூடிய செயல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் மா, பலா, வாழை என முக்கனிகள், தானியங்கள், நகைகள், வெற்றிலை பாக்கு என மங்கலப்பொருள்களை ஒரு தட்டில் வைத்துத் தூங்கி எழுந்ததும் இதை முதலில் பார்க்கச் செய்வார்கள். இதற்குப் பெயர் தான் கனி காணுதல்.

Tiruchendur
Tiruchendur

அதன்பிறகு குளித்துவிட்டு, புத்தாடை உடுத்தி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட வேண்டும். அதன்பிறகு அறுசுவை உணவு சமைத்து சாமிக்குப் படையலாக வைத்து வழிபட வேண்டும். அது ஏன் என்றால் நம் வாழ்க்கையிலும் அறுசுவை போல பல விஷயங்கள் நடக்கும்.

அதை எதிர்கொள்ள வேண்டிய மனப்பக்குவத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தருமாறு இறைவனிடம் வேண்டி வழிபட வேண்டும். வரும் குரோதி வருட தமிழ்ப்புத்தாண்டு உங்களுக்கு நல்லவிதமாக அமைய வாழ்த்துக்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews