2022 எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தாண்டு பொது பலன்கள் 2022

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் வாழ்ந்து வரும் பூமியானது தன்னைத்தானே சீர்திருத்தம் செய்து கொள்ளும். இது கடந்த பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் மகர ராசிக்கு சனி பகவான் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவார். அப்படி மூன்றாவது முறை வரும்போது அதாவது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் போது போர் அல்லது இயற்கை சீற்றங்கள் அல்லது நோய் பரவல் மூலமாக மனிதர்கள் விலங்குகள் மரம் செடி கொடிகள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இருப்பதற்காக பூமி தன்னை சீர்திருத்தம் செய்து கொள்ளும். அப்பேர்பட்ட காலகட்டத்தில் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

இந்த சூழ்நிலை 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில் வருட கிரகங்கள் என்று போற்றப்படும் சனி பகவான், குரு பகவான், ராகு பகவான் மற்றும் கேது பகவான் போன்றவர்களுடைய பெயர்ச்சியின் அடிப்படையில் உலக சீர்திருத்தம் நிகழும்.

2023 ஆம் ஆண்டுக்கு பிறகு நம்முடைய பாரத பண்பாட்டில் உருவான இயற்கை மருத்துவம், மூலிகை சார்ந்த மருத்துவ முறைகள், யோகாசனம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகள், வேத ஜோதிடம், வாஸ்து, ஹிலிங் தெரபி மக்களிடையே மக்களிடையே பரவத் தொடங்கும். அதற்கு தகுந்தார் போல நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை சிறிது மாற்றி கொள்ள வேண்டும்.

தற்போது உலக அளவில் உலகமயமாக்கல் என்ற கொள்கையின் அடிப்படையில் நாடுகள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலை இருக்கின்றன. இதன் மூலமாக எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது.

நமது பாரத நாடு மட்டும் தனக்கு தேவையான அனைத்து வளங்களையும் அனைத்து மனித வளங்களையும் இயற்கை சூழ்நிலைகளையும் பெற்றிருக்கிறது. இந்த 2022ஆம் ஆண்டு நிறைவடையும் போது நம்முடைய பாரத நாடு தன்னிறைவு அடைந்து விடும். தனி நபர் வருமானம் அதிகரிக்க துவங்கும்.

உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு ஆன்மீக தேடல் அதிகரிக்கும். தமிழ் மொழியின் அருமை பெருமைகளை உலகின் பல பகுதிகளில் வாழும் அறிஞர்கள் உணர துவங்குவார்கள்.

மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக செய்து வந்த சீர்திருத்தத்தின் விளைவாக வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி உண்டாக ஆரம்பிக்கும்.

பணப்புழக்கம் குறைந்து இன்னும் டிஜிட்டல் மயமாகும். வேறுவிதமாக சொல்வதாக இருந்தால் ரொக்க பணப்புழக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.

இந்த வருடத்திலும் சுமார் மூன்று வைரஸ்கள் மக்களிடையே பரவக் கூடிய சூழ்நிலை உண்டாகும். நமது நாட்டில் முழு ஊரடங்கு காண சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும்.

நமது பாரத நாட்டின் அண்டை நாடுகள் வீண் பிடிவாதத்துடன் எல்லையில் நம்முடன் போர் பதற்றத்தைத் உண்டாக்கும் சூழ்நிலையை அடிக்கடி உருவாக்கும். அதை நமது நாட்டின் மத்திய அரசு திறமையாக எதிர்கொள்ளும்.

ராணுவத்திற்கு பல புதிய மற்றும் நவீன ஆயுதங்கள் வாங்கும் சூழ்நிலை இந்த வருடத்தில் உண்டாகும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்த வருடம் உண்டு. அதற்கு இணையாக அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வருமான அதிகரிப்பு உண்டாகும்.

குலதெய்வ வழிபாட்டை மாதம்தோறும் பின்பற்றுபவர்களுக்கு பொருளாதார பாதிப்பு மற்றும் நோய் பாதிப்பு பெருமளவு இருக்காது.

நான்கு மாதங்களுக்கு பிறகு குரு பகவான் ஆட்சி வீட்டிற்கு செல்ல இருப்பதால் பல பழமையான ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறும். இதன் மூலமாக மக்களுடைய ஆத்ம பலம் அதிகரிக்கும்.

தங்கம் மற்றும் மஞ்சள் நிற விவசாய பொருட்களின் விலை அதிகரிக்கும்.

மனிதநேயமிக்க பாரதப் பண்பாட்டின் முக்கியத்துவத்தை பல நாட்டு மக்கள் இந்த வருடத்தில் உணர்வார்கள்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499.
ஜாதகம் பார்க்கவும் மற்றும் தொழில்முறை ஜோதிடம் கற்கவும் வீரமுனி சுவாமிகளை அணுகலாம்.

ராசி பலன்கள் 2022

மேஷம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

ரிஷபம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

மிதுனம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

கடகம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

சிம்மம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

கன்னி புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

துலாம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

தனுசு புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

மகரம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

கும்பம் புத்தாண்டு ராசி பலன் 2022!

மீனம் புத்தாண்டு ராசி பலன்கள் 2022!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment