கே.பாலச்சந்தர் பற்றி அவதூறு பேச்சு.. பாடகி சுசித்ராவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்..

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா அவதூறு கருத்துக்களைப் பேசினார். அதில் கே. பாலச்சந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை…

Susi Leaks

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா அவதூறு கருத்துக்களைப் பேசினார். அதில் கே. பாலச்சந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை அவர் காமம் பிடித்த ஆணாக இருந்தார் என்றும் பேசியிருந்தார்.

மேலும் வைரமுத்துவைப் பற்றியும் சில கருத்துக்களைக் கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்துக்கள் திரையுலகில் சலசலப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் வைரமுத்து சுசித்ராவின் பெயரைக் குறிப்பிடமால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மனவியாதி உடையவர்கள் என்ற நோக்கில் கவிதை ஒன்றை பதிவிட்டிருந்தார்.

மேலும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் பாடகி சுசித்ராவுக்கு கடுமையான தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. அதில்,
தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.

“பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..

தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள். தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள்.

அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாட திருமதி,சுசித்ரா அவர்கள் திரு.கே.பாலசந்தர் அவர்களை பற்றி அவதூறாகவும், அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும்.

இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி திருமதி.சுசித்ரா அவர்களை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.